Home Local news வைத்தியசாலைக்குள் இனம்காணப்பட்ட கொரோனா நோயாளிகள்! தற்காலிகமாக மூடப்பட்ட வைத்தியசாலை

வைத்தியசாலைக்குள் இனம்காணப்பட்ட கொரோனா நோயாளிகள்! தற்காலிகமாக மூடப்பட்ட வைத்தியசாலை

688
0

வவுனியா, பூந்தோட்டம் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு தற்காலிகமாக காலை முதல் மூடப்பட்டுள்ளது.

பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மூவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலைக்கு நோயாளர் வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு பிரதான வாயில்கள் மூடப்பட்டுள்ளதுடன், தாதியர்ரகள், வைத்தியர்கள் மட்டும் உட் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற மற்றும் கிளினிக் என்பவற்றுக்கு வருகை தந்த பலரும் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகிறது

கொரோனா அறிகுறி தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்திருந்தாலோ அல்லது பயணம் செய்தவருடன் தொடர்பில் இருந்தாலோ, விட்டிலேயே இருங்கள். குறிப்பாக உங்களுக்கு லேசாக ஏதேனும் அறிகுறி இருந்தாலோ அது சரியாகும் வரை பிறருடன் தொடர்பில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மருத்துவரிடம் சென்றாலும் அது முழுமையாக உறுதிப்படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் வைரஸ் தொற்று ஏற்பட்டு அது அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

உங்கள் மாநில கொரோனா உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். அதன் பின் சுகாதார அதிகாரிகள் உங்களின் மாதிரிகளை சேகரிப்பர். இந்தியாவில் தற்போது 15 சோதனை ஆய்வகங்கள் உள்ளன. உங்களுக்கு தொற்று இருப்பது தெரிந்தால் நீங்கள் தனிமை வார்டில் சிகிச்சை பெறுவீர்கள்.

கொரோனாவிலிருந்து நான் என்னை தற்காத்து கொள்வது எப்படி?
உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். உங்கள் கைகளின் அனைத்து பாகங்களுக்கும் கவனம் கொடுங்கள். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். உங்கள் கண்கள், மூக்குகள், மற்றும் வாயை தொடுவதை தவிருங்கள் எனவே அந்த வழியில்தான் வைரஸ் உங்கள் உடம்பில் பரவும்.

கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?
நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள்.

டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டை பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள்.

கொரோனாவை குணப்படுத்த முடியுமா?
தற்சமயம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்து இல்லை. இருப்பினும் ஆய்வாளர்கள் மருந்து கண்டுபிடித்து விலங்குகளில் சோதனை செய்து வருகின்றனர் அது சரியாக இருந்தால் பின் மனிதர்களிடத்தில் சோதனை செய்யப்படும். விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்தாலும் அது அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். கோவிட் 19 வைரஸ் என்பதால் ஆண்டி பாக்டீரியல் மருந்து (பாக்டீரியாவை அழிக்கும் மருந்து)) செயல்படாது.

கொரோனாவிலிருந்து உங்களை தற்காத்து கொள்வதற்கான சிறந்த வழி நன்றாக கைகளை சுத்தம் செய்வது. சோப்பையும், தண்ணீரையும் கொண்டு உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள்.

எல்லோருக்கும் அறிகுறிகள் ஒன்று போல இருக்குமா?
இல்லை. அறிகுறிகள் ஒருவருக்கொருவர் மாறுபடும். இதற்கு காரணம் வெவ்வேறு நபர்களின் உடல்களில் வெவ்வேறு பாகங்களை கொரோனா வைரஸ் தாக்கும் என்பதுதான்.

காய்ச்சல் இல்லாத இன்ஃபுளுவென்சா: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், தசை வலி, சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி.

காய்ச்சலுடன் கூடிய இல்லாத இன்ஃபுளுவென்சா: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், தசை வலி, சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு.

ஜீரண மண்டலத்தில் அறிகுறிகள்: தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு.

உடல் சோர்வு (முதல் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு.

குழப்பநிலை (இரண்டாம் நிலை தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, தெளிவாக சிந்திக்க இயலாமல் போகும் மனநிலை.

வயிறு மற்றும் சுவாசக் கோளாறு (அதீத தீவிரத் தன்மை): தலைவலி, நுகரும் உணர்வு இல்லாமல் போதல், காய்ச்சல், சளி, தொண்டை எரிச்சல், பசியின்மை, நெஞ்சு வலி, வயிற்று வலி, வயிற்று போக்கு, தசை வலி, தொண்டை அடைப்பு அல்லது பேச்சு தடைபடுவது போன்ற உணர்வு, உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம்.

இந்த கோவிட் 19 தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பழுது, தீவிர சுவாசப் பிரச்சனை, தீவிர நிலையில் உயிரிழப்பும் ஏற்படலாம். பொதுவாக இந்த அறிகுறிகள் சராசரியாக ஐந்து நாட்களில் தெரியலாம என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் சிலருக்கு அதைக்காட்டிலும் தாமதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

சிலருக்கு உடல் நலக்குறைவு இருப்பது தென் படுவதற்கு முன்னரே அவர் தொற்றை பரவலாம் என்றும் கூறப்படுகிறது

கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் என்ன?
புதிதாக, தொடர்ச்சியான இருமல். ஒரு மணி நேரத்துக்கும் மேல் அந்த இருமல் தொடரும் அல்லது 24 மணி நேரத்துக்குள் மூன்று அல்லது நான்கு முறை தொடர் இருமல் வரும். காய்ச்சல். உங்கள் உடல் வெப்பம் 37.8 டிகிரி செல்ஸியசைவிட அதிகமாகும்.

வாசனை அல்லது சுவையை உணர முடியாமல் போகலாம்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களில் குறைந்தது 85% பேருக்கு மேற்கண்ட மூன்று அறிகுறிகளில் ஒன்று தென்படும் என்று இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.

உங்களுக்கு உங்கள் அருகில் இருக்கும் ஒருவருக்கோ இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், வீட்டிலேயே இருப்பது, கொரோனா வைரஸ் தொற்று பிறருக்கு வராமல் தடுக்க உதவும்.

இந்த கோவிட்-19 முதன்முதலில் காய்ச்சலாக தொடங்கும். பின் வறட்டு இருமல் அதன்பின் ஒரு வாரம் கழித்து சுவாசக் கோளாறுகள் ஏற்படும். ஆனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமில்லை. இந்த அறிகுறிகள் பிற பொதுவான வைரஸாலும் ஏற்படக்கூடியவை.

கொரோனா வைரஸ்: சர்வதேச நிலை என்ன? மரணங்கள் எவ்வளவு? – எளிய விளக்கம்
கோவிட்-19 அறிகுறிகள் தென்படி, ஒருவரின் உடலில் தொற்று உண்டான நேரத்தில் இருந்து சராசரியாக ஐந்து நாட்கள் ஆகும். எனினும் 14 நாட்கள் வரை கூட ஆகலாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here