Home Local news கொரோனா தடுப்பு ஆடைகளுடன் நாடாளுமன்றம் சென்ற உறுப்பினர்

கொரோனா தடுப்பு ஆடைகளுடன் நாடாளுமன்றம் சென்ற உறுப்பினர்

277
0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோவிட் -19 பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர் அங்கிருந்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்டார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவு மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இடம்பெறுவதுடன், அதன் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுற்றது.

இந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க போக்குவரத்துச் சபையின் பேருந்துகளில் இடம்பெயர்ந்தோரை அழைத்துச் சென்றதன் அடிப்படையில் பொது நிதிகளை குற்றவியல் முறையில் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ரிஷாட் பதியூதீன் வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தூக்குத் தண்டனைக் கைதி பிரேமலால் ஜெயசேகரவும் சிறைச்சாலையிலிருந்து நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here