Home Astology இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள்

32
0

29.10.2020 வியாழக்கிழமை சார்வரி வருடம் ஐப்பசி மாதம் – 13ம் நாள், திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல். குளிகை: காலை 9.00 – 10.30. சூலம்: தெற்கு பொது: வளர்பிறை. திரயோதசி திதி பகல் 3.16 மணி வரை அதன் பிறகு சதுர்த்தசி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 12.00 மணி வரை; அதன் பிறகு ரேவதி. யோகம்: சித்த யோகம். பரிகாரம்: தைலம்

மேஷம்

மறைமுக விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மையும் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். திடீர் திருப்பங்கள் உண்டாகும் நாள்.

ரிஷபம்

பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைஅதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.

மிதுனம்

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய நண்பர்கள் உறவினர்கள் வீடு தேடி வந்து உதவுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கடகம்

வர வேண்டிய பணம் கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

சிம்மம்

சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான் கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். பண விஷயத்தில் கறாராகஇருங்கள். உங்கள் மீது சிலர் வீண் பழிசுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வரக்கூடும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கன்னி

மனைவிவழி உறவினர்களின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்

உறவினர்கள் நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

தனுசு

தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

விருந்தினர்களின் வருகை உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் கலந்தாலோ சித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்

நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உற்சாகமான நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here