Home Health வாழ வைக்கும் வல்லாரை!! வலிமை தரும் வல்லாரையின் நன்மைகள்.

வாழ வைக்கும் வல்லாரை!! வலிமை தரும் வல்லாரையின் நன்மைகள்.

28
0

வல்லாரைக்கீரை கல்வி அறிவுக்கும், ஞாபக சக்திக்கும் அதிகளவு உதவி செய்கிறது. இதனால் வல்லாரைக்கீரைக்கு “சரஸ்வதி கீரை” என்றும் அழைக்கப்படுகிறது.

வல்லாரைக்கீரையில் இருக்கும் நன்மையான விஷயங்கள் குறித்து இனி காண்போம்.

வல்லாரையுடன் துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வெங்காயம் இவைகளுடன் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். சிறிதளவு புளி உப்பு ஒரு மிளகாய் வைத்து துவையலாக அரைத்தும் சாப்பிடலாம்.

வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்து தூளாக்கிக் கொண்டு காப்பித் தூளுக்குப் பதிலாக பாலில் இந்த தூளை இரண்டு தேக்கரண்டி சேர்த்துக் குடிக்கலாம்.

வல்லாரை இரத்த விருத்தியை தந்து நரம்புகளைப் பலம் பெறச் செய்கிறது. சருமத்தில் ஏற்படும் நோய்களையும் வல்லாரை குணமாக்குகிறது.

வல்லாரை இரத்தத்தில் இரத்தச் சிவப்பணுக்கள் கூட்டுவதோடு, இரத்தத்தின் திறனும் புரதத்தின் அளவும் கூட்டும். இரத்தத்தில் ஹிமோகுளோப்பின் அளவும் உயர்த்தும்.

வல்லாரை ஒரு மிக சிறந்த இரத்த விருத்தி மூலிகை. இது நரம்புகளை பலப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.மூளைக்கு நல்ல பலத்தை கொடுக்கிறது.

தலையிடி, தலை சோர்வு, மூளை அயர்ச்சி போன்றவைகளை இது குணமாக்குகிறது.

வாய்புண்ணுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும். வாய்ப்புண்ணால் அவதிப்படுகிறவர்கள் காலையும் மாலையும் நான்கைந்து வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயில்போட்டு நன்கு மென்று தின்றால் வியப்பூட்டும் விதத்தில் வாய்ப்புண் மறைந்து விடும்.

வல்லாரைக்கீரையில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர்சத்து, தாது உப்புகள் போன்று பல சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. மேலும், சரியான விகிதமுள்ள உணவு என்பதே இதற்கு சரியான உதாரணமாகவும் கூறலாம்.

பச்சையான வல்லாரைக்கீரையை பறித்த சில மணிநேரத்தில் சாப்பிட்டால், நமது மூளையானது சுறுசுறுப்பாக செயல்படும். நமது நினைவு நரம்புகள் அனைத்தும் தூண்டப்படும். கையளவு வல்லாரைக்கீரையை சாப்பிட்டு, பசும்பாலை குடித்து வந்தால் மாலைக்கண் நோய் சரியாகும்.

வல்லாரைக்கீரையை நன்கு காயவைத்து பொடியாக செய்து, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சாப்பிடும் போது நெய் கலந்து கொடுக்கலாம். தொண்டையில் கட்டு, காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பல்வேறு நோய்களுக்கு வல்லாரைக்கீரை சிறந்த தீர்வாக அமையும்.

வல்லாரைக்கீரையை காலை நேரத்தில் மிளகுடன் சாப்பிட்டு வந்தால் உடல் சூடானது குறையும், வல்லாரையை வைத்து பற்கள் துலக்கி வந்தால் பற்களின் மஞ்சள் நிறம் மாறும், வல்லாரை துவையில் மலச்சிக்கலுக்கு அருமருந்தாகும்.

குடல் மற்றும் வயிற்று புண்களுக்கு அருமருந்து. வல்லாரைக்கீரையுடன் தூதுவளையை சேர்த்து ஒரு தே.கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் இருமல் மற்றும் சளியானது நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here