Home Health பீட்ரூட் சாறை குடித்தால்!! பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

பீட்ரூட் சாறை குடித்தால்!! பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

219
0

ஆரோக்கிய பாதிப்புக்கு ஒருபக்கம் மாத்திரைகளையும், மறுபக்கம் உணவையே மருந்தாக்கி உண்பவர்களும் உண்டு. அன்றாடம் எடுக்க வேண்டிய உணவு பொருள்களைப் பட்டியலிட்டு தினம் ஒன்றாக வேளைக்கு ஒன்றாக காய்கறிகள், பழங்கள்,கீரைகள் என்று எடுத்துக்கொண்டால் உடல் சோர்வின்றி சுறுசுறுப்பாக வளையவரலாம்.

காய்கறிகளைப் பொறியலாகவோ, கூட்டாகவோ, சாலட் ஆகவோ சாப்பிடுவது உண்டு. சிலர் சூப் வைத்தும், அல்லது சாறாக்கியும் குடிப்பார்கள். கேரட் சாறு போன்று பீட்ரூட்டையும் சாறு பிழிந்து குடிக்கலாம். பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பு மிக்க சாறு. குழந்தைகள் சட்டென்று சாப்பி டாத காய் இது. வாரம் ஒரு முறை பீட்ரூட் சாறை குடிப்பதன் மூலம் மலச்சிக்கல், மூலநோய், இரத்தசோகை,அல்சர் போன்றவை வராமல் தடுக்க முடியும்.

பீட்ரூட் சாறு:
ஃப்ரெஷ் பீட்ரூட் -1 , பசும்பால் -3 தம்ளர், தண்ணீர் – 1 தம்ளர், சர்க்கரை – இனிப்புக்கேற்ப.

செய்முறை:
சுத்தம் செய்த பீட்ரூட்டை தோல் சீவி துருவி கொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி பாலேடு இல்லாமல் வடிகட்டி கொள்ளவும். துருவிய பீட் ரூட்டை மிக்ஸியில் அடித்து சிறிது நீர் விட்டு அகலமான சாறு வடிகட்டியில் வடிகட்டி கொள்ளவும். காய்ச்சிய பால் நன்றாக ஆறியதும் பீட்ருட் சாறு சேர்த்து சர்க்கரை கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

குறைந்த அளவு பீட்ரூட் அதிக அளவு பால் சேர்ப்பதால் பீட்ருட் வாசம் அதிகம் இருக்காது. சத்துமிக்க இயற்கை பானம் இது. அதிகளவு பீட்ரூட் சேர்த்தால் குடிக்க இயலாது அல்லது கேரட் சேர்த்தும் தயாரிக்கலாம்.

பீட்ரூட் நன்மைகள்:
இரும்புச்சத்து,ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் அதிகளவில் பீட்ரூட்டில் இருக்கிறது. நார்ச்சத்து, கனிமச்சத்து, ஆன்டி -ஆக்ஸிடண்ட்கள் போன்றவை நிறைந்திருக்கிறது.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்களையும் புதுப்பிக்கும் குணத்தைக்கொண்டிருக்கிறது பீட்ரூட்.உடல் உறுப்புகளைச் சுத்தம் செய்வதற்கு அருமருந்து பீட்ரூட் சாறு. இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் பீட்ரூட்டில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட் டால் இரத்த அணுக்களின் உற்பத்தி கணிசமாக உயரும்.

சிறுவயது முதலே குழந்தைகளுக்கு பீட்ரூட் சாறு பழகினால் கண்கள் குளிர்ச்சியடைவதோடு, கண்பார்வையும் கூர்மைப்பெறும். சிறுவயதில் கண்ணாடி போடும் குறைபாடுகள் இருக்காது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதால் சத்து நிறைந்த பீட்ரூட் ஜூஸை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பீட்ரூட் சேர்ப்பது நல்லதல்ல

உடல் எடை கவலைக்குரியதுதான். உடல் பருமன் ஆரோக்கியத்துக்குக் கேடு பீட்ரூட்டுடன் வேறு சில உணவுகளை சேர்த்து உண்டால் உடல் எடை குறைந்து விடும் என கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

பீட்ரூட்டில் மிக குறைந்த அளவே கலோரிகள் உள்ளன. எனவே, உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும். அத்துடன் புரதசத்து, நீர்சத்து, ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட் நார்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புசத்து உள்ளிட்டவை உள்ளன.

மாதுளை – பீட்ரூட்

இரு சிவப்பு நிற உணவுகள் ஒன்றாக சேர்ந்தால் நலன்கள் அதிகம். அவை மாதுளையும், பீட்ரூட்டும். மாதுளை மற்றும் பீட்ரூட்டை ஒன்றாக அரைத்து சிறிது நீர், சிறிது உப்பு, எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இவற்றில் உள்ள பி-காம்ப்ளெக்ஸ் செரிமானத்தை சீராக்கி உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளும்.

பீட்ரூட் – கேரட்

கேரட், புதினா மற்றும் பீட்ரூடை சேர்த்து அரைத்து சிறிது நீர், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்புகள் விரைவாக கரைய தொடங்கி உடல் எடை ஒரே வாரத்தில் குறைய தொடங்கும்.

ஆப்பிள் – பீட்ரூட்

இரண்டிலுமே மிக குறைந்த அளவே கலோரிகள் இருக்கின்றன. ஆப்பிள் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து தேவைக்கேற்ப சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம். சிறிது இலவங்க பொடி மற்றும் உப்பு சேர்த்து கலக்கி குடித்தால் ஒரு மாதத்தில் எடை குறையும்.

தக்காளி – பீட்ரூட்

அதிக நிறங்கள் கொண்ட பழங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருமாம். தக்காளி, பீட்ரூட் இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளன. தக்காளி, புதினா மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து, எலுமிச்சை சாறு, உப்பு கலந்து தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்

பீட்ரூட்

இரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும். சோர்வாக இருப்பவர்களுக்கு அற்புதமான மருந்து இதய ஆரோக்கியத்தை கட்டி காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ஆரோக்கியமான உடல் அமைப்பை தரும் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் நீண்ட காலம் இளமையாக இருக்க பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தாலே போதும்.

நாம் அடிக்கடி உபயோகிக்கும் காய்கறிகளில் மிகவும் முக்கியமானது பீட்ரூட். பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் பி12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லது.

இதிலுள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும். பீட்ரூட் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்றாலும், அதே சமயம் பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதால் பல பக்கவிளைவுகளும் ஏற்படும்.

எந்தவொரு காய்கறியும், பழமும் தீங்கானது அல்ல. நாம் அதனை எப்படி எடுத்துக்கொள்கிறோம், எவ்வளவு எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்தே அவற்றின் பலன்கள் நம்மை பாதிக்கிறது. பொதுவாக மக்கள் அனைவரும் பீட்ரூட் சாப்பிடலாம் என்றாலும், அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகளையும் தெரிந்துகொள்ளவது அவசியம்.

பீட்ரூட் ஜூஸ் அதிகம் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகள் என்னென்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும்

பீட்ரூட் சாறு ஆரோக்கியமானதாகவும், சத்தானதாகவும் இருந்தாலும், அது அனைவருக்கும் பொருந்தாது. பீட்ரூட்டில் அதிகளவு மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இவை நல்லதுதான் ஆனால் இதிலிருக்கும் ஆபத்து என்னவென்றால் இவை அனைத்தும் உலோக சேர்மங்கள். இதனை அதிகம் சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் கணையத்தில் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. காய்கறியை அதிகமாக உட்கொள்வது கல்லீரலில் உலோக அயனிகளைக் குவிப்பதை ஏற்படுத்தும்.

பீட்ரூட்டை அதிக அளவில் உட்கொள்வது ஆரோக்கியமான நோயாளிகளுக்கு மட்டுமல்ல, உலோகக் குவிக்கும் நோய்களைக் கையாளும் நபர்களுக்கும் பல இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிறுநீரக கற்கள்

பீட்ரூட்டில் ஆக்ஸலைட்டுகள் அதிகம் உள்ளது. எனவே அதிகளவு பீட்ரூட் உட்கொள்ளும்போது ஆக்ஸலைட்டுகள் உடலில் உள்ள கால்சியத்துடன் பிணைக்கப்பட்டு இறுதியில் சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தால், பீட்ரூட் சாப்பிடுவதை நிறுத்தக்கோரி மருத்துவர்கள் அறிவுறுத்துவார். நாள் முழுவதும் நாம் சாப்பிடும் உணவை வைத்தே சிறுநீரின் நிறம் மாறுபடும். அதிகளவு பீட்ரூட் சாப்பிடுவதால் சிறுநீரின் நிறம் சிகப்பு நிறத்தில் வரக்கூடும். இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு எளிதில் ஏற்படும். பீட்டூரியா என்பது ஆபத்தான நோயாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இரும்பு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த அவசியத்தை இது உணர்த்துகிறது.

தோல் தடிப்பு

பீட்ரூட் சாப்பிடுவதால் சிலருக்கு தடிப்புகள், அரிப்பு, காய்ச்சல் போன்ற எதிர்வினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு இதனால் குரல் வளையங்களில் சுருக்கம், மூச்சுக்குழாயில் அழற்சி போன்றவை கூட ஏற்படலாம். பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கும்போது இதுபோன்ற எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வில் கூறப்படுகிறது.

மலத்தின் நிறம் மாறுபாடும்

சில வகை கீரைகள் மற்றும் காய்கறிகள் நாம் உட்கொள்ளும்போது வெளிவரும் மலத்தின் நிறம் மாறுபாடும். பீட்ரூட் அதிகம் சாப்பிடும்போது சிகப்பு நிறத்தில் மலம் கழிக்க நேரிடும். நிறம் மாறி மலம் கழிப்பதுக்கூட பீட்டூரியாவின் அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற நாட்களில் மருத்துவரை சந்தித்து சமீபத்திய உணவு தேர்வுகள் பற்றி விவாதித்துக்கொள்ளலாம். வயிற்று வலி ஏற்படும் பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளன. அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவை பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, அதிக அளவு நைட்ரேட்டுகள் உள்ள உணவு பொருட்களை உட்கொள்ளும்போது அது வயிற்று வலிக்கு வழிவகுக்கும்.

பீட்ரூட் சாறு அதிகளவு உட்கொள்ளும் சிலருக்கு வயிற்று பிரச்சனையும் ஏற்படலாம். இரத்த அழுத்தம் பீட்ரூட் சாப்பிடுவதால் இரத்தம் அழுத்தம் குறையும். ஆனால், இது ஒருவகையில் நல்லதாகவும் அமையும், தீங்காகவும் அமையும்.

இரத்த அழுத்தம் சீரற்ற நிலையில் இருக்கும்போது நீங்கள் பீட்ரூட் சாப்பிடுவதால், அது உங்கள் நிலையை மோசமாக்கலாம். ஏனெனில் பீட்ரூட் இரத்த அழுத்தத்தில் திடீர் சரிவை ஏற்படுத்தும். மேலும் இது இரத்த நாளங்களை நீர்த்துப் போக செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதற்கு காரணம் இதிலிருக்கும் நைட்ரேட்டுகள் ஆகும்.

கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் ஏற்படுத்தும்

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் கர்ப்ப காலத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் நைட்ரேட்டின் விளைவுகளுக்கு அதிக உணர்திறன் உடையவர்கள். பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவு பீட்ரூட் உண்ணும்போது, இரத்தத்தில் மெத்தெமோகுளோபின் அளவு உயர்ந்து, ஆற்றல் இல்லாமை, தலைவலி, தலைச்சுற்றல், தோலின் நிறம் மாறுபடுதல் போன்றவை ஏற்படும்.

பீட்ரூட் சாறு முக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. ஆனால் அதன் அதிகப்படியான உட்கொள்ளல் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். பீட்ரூட் சாறு எடுத்துக்கொள்ள விரும்பினால் மருத்துவரின் அறிவுரைபடி உட்கொள்வது நல்ல விளைவுகள ஏற்படுத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here