Home Local news 15 வயது சிறுமியான மகளை பலாத்காரம் செய்ய முற்பட்ட நபர் கைது!

15 வயது சிறுமியான மகளை பலாத்காரம் செய்ய முற்பட்ட நபர் கைது!

432
0

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது மனைவியின் முதல் திருமணத்தில் கிடைத்த 15 வயதுடைய மகளை மது போதையில் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த சந்தேக நபரை இம்மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(6) உத்தரவிட்டார்.

தங்க நகர், சேருநுவர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதோடு, தனது மனைவியின் முதல் திருமணத்தின் போது கிடைத்த பதினைந்து வயதுடைய சிறுமி சந்தேக நபரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையிலே சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மது போதையில் வீட்டுக்குச் சென்று சந்தேக நபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரின் மனைவி சேருநுவர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பதினைந்து வயதுடைய சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here