Home Local news சோளன் வியாபாரிக்கு நேர்ந்த பரிதாபம்

சோளன் வியாபாரிக்கு நேர்ந்த பரிதாபம்

164
0

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (06) வாகனத்திலிருந்து ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பகுதியினை சேர்ந்த சோளன் வியாபாரி ஒருவரின் சடலமே மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கனகராயன்குளம் பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்றின் முன்பகுதியில் ஒருவர் சடலம் கிடப்பதாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த நபர் வாகனத்தில் சோளன் விற்பனைக்காக வந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here