Home Local news உயர்தர மாணவனின் முன்மாதிரியான செயலால் குவியும் வாழ்த்துக்கள்!!

உயர்தர மாணவனின் முன்மாதிரியான செயலால் குவியும் வாழ்த்துக்கள்!!

473
0

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனாவின் அச்சத்திற்கு மத்தியில் தான் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றன. இந்த பரீட்சையினை இலங்கை அரசாங்கம் ,சுகாதாரத் துறை மற்றும் பரீட்சை திணைக்களம் என்பன வெற்றிகரமாக இன்று நடத்தி முடித்துள்ளன.

இன்றைய தினம் க.பொ.த உயர்தரபரீட்சைகள் அனைத்தும் இன்று முற்றுமுழுதாக நிறைவு பெற்றது. பரீட்சை முடிந்தன் பின்னர் உயர்தர மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ள இந்த நிலையில் உயர்தர மாணவனினுடைய செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளதுடன் அந்த மாணவனை அனைவரும் முன்மாதிரியாக கருதுகின்றனர்.

க.பொ.த.உயர்தர பரீட்சையை வெற்றிகரமாக நிறைவுசெய்த பின்னர். தான் 13 வருடமாக கல்விகற்ற பாடசாலையான எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி வித்தியாலத்திலிருந்து விடைபெறும் போது பாடசாலையினை மண்டியிட்டு வணங்கி தன்னுடைய நன்றியினை தெரிவித்துள்ளான்.

இந்த மாணவின் செயல் மிகச்சிறப்பானதென்று தற்பொழுது இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்கில் மக்கள் பகிர்ந்து குறித்த மாணவனை வாழ்த்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here