Home Local news திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேலும் இருவரிற்கு தொற்று

திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேலும் இருவரிற்கு தொற்று

352
0

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த 2ம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வைத்தியருடன் தங்கியிருந்த மேலும் ஒரு வைத்தியரிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியரிற்கு முதல்தடவை பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாத போதும் தனிமைப்படுத்தலின் பின்னர் நேற்று மேற்கொண்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறி வாழைச்சேனை சென்றுவந்த சுகாதார உத்தியோகஸ்தர் ஒருவர் கடமைக்கு திரும்பியுள்ள நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here