Home Local news AO ன் தன்னிச்சையான செயற்பாடு!! 25ற்கும் மேற்பட்ட ஊழியர்களிற்கு நேர்ந்த பரிதாபம்

AO ன் தன்னிச்சையான செயற்பாடு!! 25ற்கும் மேற்பட்ட ஊழியர்களிற்கு நேர்ந்த பரிதாபம்

370
0

திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேலும் இருவரிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதுதொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்றும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் நோயாளர்காவு வண்டியை பயன்படுத்தி கொழும்பில் உள்ள தனது தாயாரின் பிறந்தநாளுக்கு சென்று திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை கடந்த 1ம் திகதி உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த அதே விடுதியில் பணியாற்றிய மேலும் ஒரு வைத்தியரிற்கு நேற்று இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இன்று காலை கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த வைத்தியர் ஐ.டி.எச் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, வாழைச்சேனை பகுதிக்கு விடுமுறையில் சென்ற சிற்றூளியர் ஒருவர் அங்கு ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தல் சட்ட விதிகளிற்கு அமைய தொடர்ந்து வீட்டினிலேயே தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், திருகோணமலை பொதுவைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகஸ்தரால் குறித்த உத்தியோகஸ்தரிற்கு சம்பளமற்ற விடுமுறை என கடிதம் அனுப்பப்பட்டுள்ளதோடு உடனடியாக பணிக்கு திரும்புமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பதறிய மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த சிற்றூளியர் கொரோனா தொற்று இனம் காணப்பட்ட பகுதியிலிருந்து சுகாதார பரிசோதகரின் சான்றிதழுடன் திருகோணமலை பொதுவைத்தியசாலையின் துணிகள் துவைக்கும் பகுதியில் கடமை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவர் சில விடுதிகள், சிற்றூண்டிச்சாலை, போன்ற இடங்களில் எல்லாம் முககவசமின்றி நடமாடியுள்ளமை தெரியவந்துள்ளது.

பின்னர் நேற்று மாலை திடீரேன வைத்தியசாலையின் நோய்த்தடுப்பு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இன்று காலை அவரிற்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் பணியாற்றிய பகுதி உடனடியாக அவருடன் சேர்த்து மூடப்பட்டது.

பின்னர் இன்று மாலை 7 மணியளவில் அவர் ஈச்சிலம்பற்று தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

அறிகுறிகளின் அடிப்படையில் வைத்தியரிற்கு இருமல் மற்றும் காய்ச்சல் காணப்பட்டதால் அவர் ஐ.டி.எச் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிற்றூளியரிற்கு எதுவித அறிகுறிகளும் காணப்படாத காரணத்தால் அவர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் உரிய அதிகாரிகளினால் தெரியப்படுத்தப்பட்டாலும் இதற்குள்ளும் பாகுபாடா என பல ஊழியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் மாட்டிக்கொண்ட நபரை கடமைக்க அழைத்தமை மற்றும் உடனடியாக PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காமல் பணிக்கு அமர்த்திய நிர்வாக உத்தியோகஸ்தரின் தன்னிச்சையான செயற்பாட்டினால், கடந்த நாட்களில் குறித்த சிற்றூளியருடன் தொடர்புபட்ட மேலும் 25 ஊழியர்கள் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிர்வாக உத்தியோகஸ்தரின் பல மன்மத லீலைகள் கிடைக்கப்பெற்ற வண்ணம் உள்ளது. மறுபதிவில் எதிர்பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here