Home Local news யாழில் மருத்துவபீட மாணவனின் விபரீத முடிவு

யாழில் மருத்துவபீட மாணவனின் விபரீத முடிவு

346
0

நாகர்கோவில் தெற்கு நாகர்கோவிலை பிறப்பிடமாகவும், மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன் (யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மூன்றாம் வருட மாணவன்) அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை(17) அகால மரணமானார்.

அன்னார் சிதம்பரநாதன் கமலவேணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் சுகந்தினி, கேதீஸ்வரன்(அபிவிருத்தி உத்தியாகத்தர் பருத்தித்துறை பிரதேச செயலகம்), ஜெகதீஸ்வரன் (பத்திரிகையாளர், பிள்ளையார் ஸ்ரோஸ் மந்திகை), பிறேமினி(அபிவிருத்தி உத்தியோகத்தர் நகராட்சி மன்றம் வல்வெட்டித்துறை), நிஷாந்தினி (பட்டதாரி பயிலுனர் பருத்தித்துறை பிரதேச சபை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்

இறஞ்சநாதன், மயூரதி, தவக்குகன், இளவேந்தன்(விசுவமடு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று புதன்கிழமை (18) துன்னாலை வடக்கிலுள்ள அன்னாரின் இல்லத்தில் பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் கியான்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்
குடும்பத்தினர்.
மாதாகோவில் வீதி,
துன்னாலை வடக்கு,
கரவெட்டி.

ஆழ்ந்த அனுதாபங்கள்!
சக ஊடக நண்பன் வடமராட்சி செல்வம் ஜெகதீஸின் சகோதரன், யாழ் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றன், மாத கோவில் வீதி துன்னாலை வடக்கு கரவெட்டிச் சேர்ந்தவர் நேற்று அகால மரணமடைந்துள்ளார்.
இறப்புக்கான காரணம் இது வரை தெரியவில்லை.

கோண்டாவிலில் வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வியைத் தொடர்ந்து வந்த நிலையில், சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

இத் துயரச் செய்தி கேட்டு குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.

இரண்டு வருடங்கள் கழிந்தால் ஒரு வைத்தியனாக வெளி வர வேண்டிய இவர்,உயிரை மாய்ந்த மர்மம் என்ன???

எதிர்கால வைத்தியர் ஒருவரை
இழந்துள்ளது வடமராட்சி

ஊடகவியலாளர் செல்வம் ஜெகதீஸ்வரனின் சகோதரரும் யாழ். வடமராட்சி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவனுமான சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது – 23) நேற்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டார்.

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் தெற்கைச் சொந்த இடமாகவும், வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை, துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட குறித்த மாணவன், கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தமது பல்கலைக்கழகக் கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்தார்.

இந்தநிலையில், இன்று விரிவுரைக்குச் சமுகமளிக்காததால் அவருடைய சக மாணவர்கள் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டனர். தொடர்சியாக அழைப்புகளை மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த சக மாணவர்கள், அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றனர்.

ஆனால், அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, குறித்த மாணவர்கள் கதவை உடைத்து உட்சென்று பார்த்தனர். அப்போது அங்கு இளங்குன்றன் யன்னல் கம்பியில் கட்டப்பட்டிருந்த கயிறு ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார்

இது தொடர்பில் உடனே பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், அவரின் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

மரணத்தில் சந்தேகம்

குறித்த மாணவன் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சம்பவங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை எனவும், மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை சடலத்தைப் பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மயூரன், கழுத்து இறுகியதால் மரணம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

எனினும், மாணவனின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸாரும் அவரின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மருத்துவபீடத்தில் அஞ்சலி

இளங்குன்றனின் உடல் நேற்றிரவு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து இளங்குன்றனின் உடல் பருத்தித்துறை, துன்னாலை வடக்கிலுள்ள அவருடைய இல்லத்துக்கு மருத்துவபீட மாணவர்களால் கொண்டு செல்லப்படும் என்று சக மாணவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here