Home cinema நயன்தாராவின் பிறந்தநாள்!!

நயன்தாராவின் பிறந்தநாள்!!

262
0

இன்று நடிகை நயன்தாராவின் பிறந்தநாள். பெரும்பான்மையான பதிவுகள் அவரை கேலி செய்தும் அவரின் காதலையும், கற் பையும் விமர்சித்து வந்த வண்ணமே உள்ளது. அப்படியான பதிவிடுவர்களின் மனநிலை இவ்வளவு கீழ்த் தரமாக இருப்பதை எண்ணி வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கின்றது.

ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒன்று உள்ளது. அவர்களின் அந்தர ங்கத்தை எட்டிப்பார்த்து விமர்சிக்கும் அளவுக்கு ஒழுக்க சீலர்கள் இங்கு யாருமில்லை. காதல் என்பது பொதுவான ஒன்று ஒருத்தருக்கு ஒருவர் மேல் ஒரு தடவை மட்டுமே வர வேண்டும் என்ற கட்டாயம் இங்கில்லை.

ஒரு சாதாரண பெண்ணின் வாழ்வில் ஓரிரு காதல்கள் வந்து கடந்து செல்வது வழமை அதே சாதாரண பெண் ஒரு உயர்ந்த நட்சத்திரமாக இருக்கும் பட்சத்தில் அது விமர்சனமாகவும் கேலியாகவும் சித்தரிக்கப்படுகின்றது. இதுவே நயன்தாரா யாரோ ஒருவராக இருந்திருந்தால் இத்தனை வன்மம் அவர் மேல் வீழ்ந்திருக்காது.

ஒரு பெண்ணாக ஏமாற்றங்கள், துரோகங்கள் என கடந்து தனது வாழ்வில் உயர்ந்து கொண்டிருக்கும் அவரை கற்பி ழந்த வேசியை போல சித்தரிக்கும் உங்கள் அறிவு வளர்ச்சி வியப்பை தருகின்றது.

அருகிலிருந்து பார்த்தது போல இவள் இத்தனை பேருடன் படுத்தாள், she is a bitch, porn star என்றெல்லாம் சித்தரிக்கும் யாவரும் இன்னொரு பெண்ணின் நிர்வா ண புகைப்படம் கேட்டு தவமிருக்கும் ராமார்களே.

நாளை உனக்கோ எனக்கோ மனைவியாய் வரப்போகின்றவளுக்கு கூட முன்னாள் காதல்கள் இருக்கலாம் அதற்காக அவள் நடத்தை கெட்டவள் என்றாகிவிடாது.

சினிமாவில் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ளவும் வாய்ப்புக்காகவும் எத்தனையோ நடிகைகள் எத்தனையோ பிரயத்தனம் செய்யும் இந்த காலத்தில் காதல் என்ற பெயரில் ஏமாற்றமடைந்து உடைந்து அதிலிருந்து வெளி வந்து தன் மேல் வீசப்பட்ட அத்தனை விமர்சனங்களையும் தூக்கி எறிந்து படிப்படியாக உயர்ந்து ஒரு ஹீரோவுக்கு இருக்கும் ஆதரவுக்கு அதிகமாகவே பெயரை சம்பாதித்து ஹீரோவின் துணையில்லாமல் தனித்து படங்கள் செய்து அதில் வெற்றியடைந்து ‘Lady Super Star’ என்ற நிலைக்கு உயர்ந்து 16 வருடங்களாக சினிமாவில் நிலைத்து இன்றும் முன்னணி நடிகையாக இருப்பதுதான் உங்கள் அத்தனை விமர்சனத்திற்கும் நயன்தாராவின் ஒரே பதில்.

அவர் ஒரு நடிகை. அவரின் படங்களை விமர்சிக்கலாம் அவரின் கதாப்பாத்திரத்தை விமர்சிக்கலாம் அதை விடுத்து அவரின் தனிப்பட்ட வாழ்க்கை மேல் எந்த வன்மத்தையும் காட்டாதீர்கள்.

யாரேனும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைத்தாள் உங்களுக்கு எப்படி கோபம் வருமோ அதே உணர்வுதான் பிறருக்கும் இருக்கும். ஒரு உயர்ந்த நடிகை என்பதை தாண்டி அவரும் ஒரு சாதாரண பெண் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

யார் என்ன சொன்னாலும் என்ன நடந்தாலும் தனது பாதையில் முன்னேறிக்கொண்டு இருக்கும் நயன் ஒரு நல்ல நடிகை. ஒரு சில கதாப்பாத்திரங்களில் அவரை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது.

எத்தனையோ ஆண்களின் கனவுக்கன்னி, சக நடிகைகளின் கடும் போட்டியாளர் நயன். பல ஏமாற்றத்தை கடந்து தற்போது கிடைத்திருக்கும் காதல் கைகூட வேண்டும் மேலும் சினிமாவில் அவர் வளர வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here