Home Astology இன்றைய ராசிபலன்கள் 25-11-2020

இன்றைய ராசிபலன்கள் 25-11-2020

195
0

இன்றைய ராசிபலன்கள்

ராசிபலன்

மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

ரிஷபம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

மிதுனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். முயற்சியால் முன்னேறும்.

கடகம்: கணவன்- மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. புது முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விருந்தாளிகளின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனசை வாட்டும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். முயற்சிகள் தாமதமாகும் நாள்

கன்னி: பிள்ளைகள் உங்கள் அருமையை புரிந்து கொள் வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை தருவார்கள் வெற்றி கிட்டும் நாள்.

விருச்சிகம்: திடீர் திட்டங்களை தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

தனுசு: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. உயர்வு பெரும் நாள்.

மகரம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரிகள் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாமர்த்தியம் பிறக்கும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here