கிளிநொச்சியில் போத்தலில் தண்ணீர் விற்பனை செய்பவர்களில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை தொற்று இனங்காணப்பட்ட கிளிநொச்சி 155 ஆம் கட்டையைச் சேர்ந்த வயோதிபருக்கு கொரோ தொற்று ஏற்படுவதற்கு குடிதண்ணீர் போத்தல்கள் விநியேகத்தில் ஈடுபடும் பணியாளர்கள காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இதனையடுத்து கொரோனா பரபரவால் அதிகமாக காணப்படும் மேல்மாகாணத்துக்குச் சென்று குடிதண்ணீர் போத்தல்களை எடுத்து வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகிகு்ம் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்தோருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள சுகதார துணையினர் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் கிளிநொச்சி தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் இடைப்பட்ட பகுதி) தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் ஒரே விற்பனை நிலையத்தை சேர்ந்த 3 பேருக்கும் மேற்படி விற்பனை நிலையத்தின் அருகில் இருக்கின்ற இன்னும் ஒரு விற்பனை நிலையத்தில் தொழில் புரியும் ஒருவர், மற்றும் அருகிலுள்ள விற்பனை நிலையத்தில் கடமை புரிந்து கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.