Home Lifestyle யாழில் எழில் கொஞ்சும் சொர்கபுரியான பிரதேசம்!! படையெடுக்கும் இளசுகள்

யாழில் எழில் கொஞ்சும் சொர்கபுரியான பிரதேசம்!! படையெடுக்கும் இளசுகள்

யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி பகுதியிலுள்ள அழகிய கால்வாய் ஒன்றைப் பார்ப்பதற்காக குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் படையெடுப்பதாக எமது யாழ் செய்தியாளர் கூறுகின்றார்.

குறித்த கால்வாயின் கண்ணைக் கவரும் அழகிய தோற்றம் இலங்கையிலுள்ள சில அழகான ஆறுகளை ஞாபகமூட்டுவதாக முக நூலில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

யாழ் தென்பராட்சியின் சாவகச்சேரி பகுதியிலுள்ள இல்வாரை எனும் கிராமத்தில் குறித்த கால்வாய் காணப்படுவதுடன் இது கடந்த வருடம் புனரமைப்புச் செய்யப்பட்டதாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர் வாய்க்காலுடன் மரங்கள் ஒன்று கூடி பச்சை பசேலென அழகானதும் அமைதியான வயல் பகுதி அங்கு செல்வோரை இனம்புரியாத அமைதியில் ஆழ்த்துவதாக கூறப்படுகின்றது.

Inthusan ணா! ஒரே ஒரு கெருடாவில்~இல்வாரை போட்டோ தான் போட்டன். மொத்த ஊரும் famous.

சும்மா, தண்ணி பாக்க போனது. இன்னும் 4-5 நாள்ல, Ticket counterம் வச்சிடுவாங்க போல.

அழகான இடமாக இருக்கிறதே, ஒருவேளை கேரளாவோ, தமிழகத்தில் பொள்ளாச்சியோ என்று ஆச்சரியப்படாதீர்கள். இது இலங்கையின் யாழ் குடா நாட்டில் உள்ள இல்வாரை, சாவகச்சேரி Pc- ஜனா

பலர் ஆர்வமாய் கேட்டார்கள்.இடம் சாவகச்சேரி இல்வாரை (சாவகச்சேரி சரசாலை வீதியால் செல்லும் போது VMK மில்லுக்கு அருகாமையில் இருக்கிறது இந்த இடம்)

இந்த கொள்ளை அழகு வேறு எங்கும் இல்லை. எங்கள் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இல்வாரை எனும் கிராம சூழலே! நம்மூர் வாய்க்கால் வழிகளை தூர்வாரி மருத மரங்களை நடுவோமா?!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here