Home Indian news தன்னம்பிக்கை பெண்மணியின் நடமாடும் பரோட்டா கடை

தன்னம்பிக்கை பெண்மணியின் நடமாடும் பரோட்டா கடை

நேற்று இரவு (21-12-2020) சரியாக 8.30 மணி இருக்கும் சூடான பரோட்டா உங்கள் இல்லம் தேடி என்ற விளம்பரத்துடன் நான் வசிக்கும் ஜாம்புவானோடை- மேலக்காடு பகுதி சாலையில் ஒரு பெண்மணி இரு சக்கர வாகனத்தில் பரோட்டா விற்பனை செய்துகொண்டு வந்தார் .

ஆச்சரியத்துடன் அவரிடம் பரோட்டா வாங்கிகொண்டே அவரைப்பற்றிய தகவல்களை சேகரித்தபோது திரு. சண்முகவடிவேலு அவர்களின் மனைவி திருமதி. மகாலட்சுமி என்பதும் (நெடுங்கேணி அம்பட்டங் கொல்லை) பகுதியில் ஜீவா மெஸ் என்ற ஒன்றை கடந்த ஒன்றரை வருடங்களாக நடத்தி வருவதாகவும் தெரியவந்தது

தன்னுடைய கணவருக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதால் இரண்டு மகன்களை வைத்து கொண்டு மிகவும் சிரமபடுவதால் மதிய உணவு மட்டும் விற்பனை செய்து வந்த நிலையில் அந்த வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லாததால் தன் கணவர் மற்றும் இரண்டு (17 வயது, 12 வயது) மகன்கள் உதவியுடன் இந்த நடமாடும் பரோட்டா விற்பனை கடந்த ஒரு வாரமாக செய்து வருவதாக மிக வேதனையுடன் கூறினார்.

மேலும் இந்த முயற்சியை சிலர் கேலி, கிண்டல் செய்வதாகவும் மிக வருத்தத்துடன் தெரிவித்தார்

விமர்சிப்பவர்களை புறந்தள்ளுங்கள் அதே வாயால் உங்களை வாழ்த்தும் நாள் வரும் தங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரியே மேலும் தங்கள் வாழ்வில் வறுமை நீங்கி வளங்கள் பெறுக இறைவனை வேண்டுகிறேன்.

இரவு நேரத்தில் மட்டுமல்லாது காலை வேளையில் இட்லி, வடை, பொங்கல் விற்பனையும் உண்டு

குறிப்பு: இத்தகவலை அவரின் அனுமதியோடு பகிர்கிறேன் உணவு ஆர்டர்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 9551530982

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here