தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பிரதான பேசுபொருளாகியுள்ளது இந்த தம்பதி.
இளம் பெண்ணொருவர் தனது தந்தையின் வயதையொத்த முதிர்ந்த கணவருடன் சந்தோசமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் பல சமூக வலைத்தளவாசிகளையும் பாதித்துள்ளது.
உண்மையில் இவர்கள் யார்? இந்த வயது முதிர்ந்தவருக்கு இளம் மனைவி எப்படி சாத்தியமானார் என்ற கேள்விகள் அடுக்கப்பட்டபோது பணத்துக்காக அந்த பெண் தவறான முடிவை எடுத்துள்ளதாக பலரும் விமர்சித்திருந்தனர்.
ஆனால் டொம் இமாம் தம்பதியின் நெருங்கிய உறவினர்கள் இதை அடியோடு மறுத்துள்ளதுடன் கல்வியால்தான் இந்த இணைவு சாத்தியமானதாக சொல்லியுள்ளனர்.
இந்த படங்களில் இருக்கும் வயதானவர்தான் டொம் இமாம்.
பங்களாதேஷ் நாட்டை பூர்வீகமாகக்கொண்ட ஒரு அமெரிக்க விஞ்ஞானி என அறியப்படுகிறார்.
தனது இளமானி பட்டத்தை பங்களாதேஷ் ஷிறீ பங்களா விவசாய பல்கலைக்கழகத்தில் முடித்ததுடன் தனது கல்வி புலமைக்காக விசேட புலமைபரிசில் பெற்று அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் தனது முதுகலைமானி பட்டத்தை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முடித்ததுடன் மூன்றாவது தாரமாக இந்த இளம் பெண்ணை மனைவியாக்கியுள்ளார்.
ஒரு படித்த மேதையை வயது வேறுபாடு பாராமல் கரம்பிடித்ததுடன் முகத்தில் துளியளவு சலனமும் இன்றி போஸ் கொடுத்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்க ஒன்றாகும்