Home cinema வைரலாகும் வலிமை அஜித் குடும்ப போட்டோ

வைரலாகும் வலிமை அஜித் குடும்ப போட்டோ

2020ம் ஆண்டு முழுவதும் அப்டேட் கேட்டு கெஞ்சியே டயர்டாகிவிட்டார்கள் அஜித் ரசிகர்கள். ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாவது இல்லை. அதனால் அப்டேட் கேட்டு அவ்வப்போது ஏதாவது ஒரு ஹேஷ்டேகை ட்விட்டரில் அதுவும் தேசிய அளவில் டிரெண்டாகவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

அஜித்தின் பிறந்தநாள், தீபாவளி என்று எதற்குமே அப்டேட் வராதது ரசிகர்களை கவலையும், எரிச்சலும் அடைய செய்தது. தல நீங்க நல்லா இருப்பீங்க, தயவு செய்து இனிமேல் வினோத் இயக்கத்திலோ இல்லை போனி கபூர் தயாரிப்பிலோ நடிக்காதீர்கள். மேலும் உங்களின் பி.ஆர்.ஓ.வை முதலில் மாற்றுங்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலிமை படத்திற்காக அஜித் பைக் ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தான் ரசிகர்கள் இந்நாள் வரை கொண்டாடி வந்தார்கள். புத்தாண்டுக்கு அப்டேட் கொடுங்கஜி என்று போனி கபூரிடம் ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்நிலையில் அஜித் தன் வலிமை குடும்பத்துடன் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அது படக்குழு வெளியிட்டது இல்லை. இருப்பினும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வலிமை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த காரணத்தால் #Valimaiதிருவிழாஆரம்பம் என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அந்த ஹேஷ்டேகை பார்த்தவர்கள் வலிமை அப்டேட் வந்துவிட்டதா, ஆச்சரியமாக இருக்கிறதே என்று அதை க்ளிக் செய்து பார்த்தால் புகைப்படம் தான் இருக்கிறது. அதானே, போனி கபூர் அப்டேட் எதுவும் கொடுத்திடப் போறாரு என்று சமூக வலைதளவாசிகளே சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது.

யாருக்காவது பிறந்தநாள் என்றால் வாழ்த்து தெரிவிக்க தான் போனி கபூர் ட்விட்டர் பக்கம் வருகிறார். இன்று யாருக்கு பிறந்தநாள் என்று கூகுள் செய்துவிட்டு வந்து வாழ்த்து ட்வீட் போட்டு நம்மை எல்லாம் கடுப்பேற்றிப் பார்ப்பதையே இந்த மனுஷன் வேலையாக வைத்திருக்கிறார் என்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here