Home News வங்கியில் வாடிக்கையாளரின் கதறல்

வங்கியில் வாடிக்கையாளரின் கதறல்

வங்கி ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவரிற்கும் வங்கி ஊழியர்களிற்கும் இடையில் இடம்பெற்ற முரன்பாடு ஒன்றை இங்கு தருகிறோம்.

வாடிக்கையாளர் : சார் பணம் எடுக்கணும்
வங்கி ஊழியர் : ஏடிஎம்ல போய் எடுத்துக்கனும் இங்க தர மாட்டோம்.

வாடிக்கையாளர் : சார் பணம் கட்டணும்
வங்கி ஊழியர் : வெளிய டெபாஸிட் மெஷின் இருக்கு அதுல கட்டுங்க சார்.

வாடிக்கையாளர் : சார் பாஸ்புக்காவது என்ட்ரி போட்டுக்கொடுங்க,
வங்கி ஊழியர் : அதோ இருக்கு பாருங்க பாஸ்போர்ட் என்ட்ரி மிஷின் அதுல போய் போட்டுக்கோங்க

வாடிக்கையாளர் : சார் லோன் வேணும்
வங்கி ஊழியர் : சார் லோன் தர நாங்க ஏஜென்ட் நியமனம் பண்ணிருக்கோம் முன்னாடி அவங்க கிட்ட போய் ஆலோசனை வாங்கிட்டு வாங்க.

கடுப்பாகிப் போன வாடிக்கையாளர்

யோவ் நீங்க எல்லாம் எதுக்குய்யா தெண்ட சம்பளம் வாங்கிட்டு இங்க இருக்கீங்க எல்லாத்துக்கும் மிஷின் இருக்கு அத வேடிக்கை பார்க்க தான் நீங்க இருக்கீங்களா எனக்கு மிஷின்ல பணம் கட்ட தெரியாது இப்ப எப்படி கட்டுறது?

வங்கி ஊழியர் : சார் வெளிய செக்யூரிட்டி இருக்காரு அவர் சொல்லித் தருவாரு நீங்க போய் அவர்கிட்ட கத்துக்குங்க.

வாடிக்கையாளர் : அப்படின்னா உங்க ஒட்டு மொத்த வேலையும் ஒரு செக்யூரிட்டி தான் பாக்குறாரு அப்படித்தான? இதுதான் இன்றைய நிலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here