Home Astology இன்றைய ராசிபலன்கள் 11-01-2021

இன்றைய ராசிபலன்கள் 11-01-2021

சார்வரி வருடம் மார்கழி 27ஆம் நாள் ஜனவரி 11, 2021 திங்கட்கிழமை. திரயோதசி திதி பகல் 02.33 மணிவரை அதன்பின் சதுர்த்தசி திதி. கேட்டை நட்சத்திரம் காலை 09.09 மணிவரை அதன் பின் மூலம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

சந்திரன் சஞ்சாரத்தினால் இன்று உங்கள் ராசிக்கு காலை 09.09 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளை தவிர்க்கவும். பிற்பகலுக்கு மேல் நல்ல காரியம் செய்யவும்.

சந்திரன் சஞ்சாரம் இன்று சாதகமாக இல்லை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். வீண் வம்பு வழக்குகள் வேண்டாம் வீட்டை விட்டு வெளியே செல்வதைக்கூட தவிர்த்து விடவும். பயணங்களில் கவனம் தேவை.

சந்திரன் சஞ்சாரம் உங்களின் மனநிலையில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்றைய தினம் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் லாபமும் கிடைக்கும். இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். திடீர் பயணம் செல்ல வேண்டியிருக்கும் தயாராக இருங்கள்.

சந்திரன் சஞ்சாரம் உங்க ராசிக்கு சாதகமாக இல்லை. இன்று குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படலாம். முயற்சி செய்தால் மட்டுமே எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிற்பகலுக்கு மேல் மனக்குழப்பம் கொஞ்சம் குறையும் உற்சாகமான மனநிலைக்கு மாறுவீர்கள்.

சந்திரன் சஞ்சாரம் உங்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறது. குடும்பத்தில் இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள் சுப செலவுகள் ஏற்படும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள்.

சந்திரன் உங்க ராசிக்கு சாதகமான பலன்களை தரப்போகிறார். இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்கள் நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விஐபிக்கள் ஆதரவினால் நன்மைகள் நடைபெறும்.

சந்திரன் சஞ்சாரம் உங்க ராசிக்கு சாதகமாக உள்ளது. மனதிலும் உடலில் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். பண வரவு நன்றாக இருக்கும் சுப செலவுகள் தேடி வரும். திடீர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கமும் பாசமும் அதிகரிக்கும்.

சந்திரன் சஞ்சாரத்தினால் சுப முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பணவரவு உண்டாகும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

சந்திரன் சஞ்சாரத்தினால் இன்றைக்கு சுப விரைய செலவுகள் ஏற்படும். சின்ன சின்ன மனக்குழப்பம் வரலாம். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்தால் லாபம் கிடைக்கும். பேச்சில் கவனமாக இருங்க விட்டுக்கொடுத்து போங்க.

சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

சந்திரன் உங்களுக்கு சந்தோஷத்தையும் மன தைரியத்தையும் கொடுப்பார். இன்று நீங்கள் எந்த செயலையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் சற்று குறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களால் நன்மைகள் கிடைக்கும்.உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்னச் சின்ன இடையூறுகள் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் புதிய நபர்களால் நன்மைகள் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here