வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் உடலில் ஏற்படும் பலவகையான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவம் என்னென்ன உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். சாதாரண வயிற்று வலி, தலைவலி, சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவரைதான் அணுக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பிரச்சனை சரியாக பலவகையான சித்த மருத்துவம் குறிப்புகள் இருக்கின்றன அவற்றில் சிலவற்றை இங்கு பதிவு செய்துள்ளோம். அவையெல்லாம் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சளி குணமாக:
கடுமையான நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணெயுடன் கொஞ்சம் கற்பூரம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும், பின்பு மிதமான சூட்டில் அந்த எண்ணெயை தினமும் மூன்று வேலை தடவினால் சளி குணமாகும்.
பித்த வெடிப்பு சரியாக:
பித்த வெடிப்புக்கு கண்டங்கத்திரிக்கா இலையை நன்றாக அரைத்து பின்பு அவற்றின் சாறை எடுத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து நன்றாக காய்ச்சி பித்த வெடிப்பு உள்ள இடத்தில் போட்டு வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்புக்கு சித்த மருத்துவம்:
சித்த மருத்துவம்: மூச்சுப்பிடிப்புக்கு கற்பூரம், சாம்பிராணி, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து, வடித்த கஞ்சியில் கலந்து மீண்டும் அந்த கஞ்சியை நன்றாக கொதிக்க வைத்து மூச்சிபிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேலை தடவினால் மூச்சுப்பிடிப்பு குணமாகும்.
வறட்டு இருமல் சரியாக:
வறட்டு இருமலுக்கு எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால் வரட்டு இருமல் குணமாகும்.
மாதவிடாய் பிரச்சனை சரியாக:
கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி பலம்பெறும்.