சார்வரி வருடம் மார்கழி 28ஆம் நாள் ஜனவரி 12, 2021 செவ்வாய்கிழமை. சதுர்த்தசி திதி பகல் 12.23 மணிவரை அதன்பின் அமாவாசை திதி. மூலம் நட்சத்திரம் காலை 07.37 மணிவரை அதன் பின் பூராடம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும் கவனமாக இருக்கவும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை. வீட்டில் குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
சந்திரன் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது நல்லது. இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் உற்சாகம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மை ஏற்படும். விலை உயர்ந்த ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செல்வீர்கள். சுப செய்திகள் வீடு தேடி வரும். மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.
சந்திரன் இன்று ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமை அதிகரிக்கும் திடீர் லாபம் வரும்.
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றிகள் கிடைக்கும்.
சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் அமைதியாக இருப்பார்கள். பெண்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு எற்படலாம் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகள் குறையும். பேச்சில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைக்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சந்திரன் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கிறார். பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். தடை உத்தரவு காலம் முடியும் வரை வீட்டிலேயே அமைதியாக இருங்க. வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து பேசவும். வீண் பிரச்சினைகள் ஓரளவு குறையும். செய் தொழில் லாபம் வரும். வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சற்று குறையும். பணம் விசயத்தில் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சிறு பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை.
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு பணவரவு வரும். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். நிதி நிலைமை சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்தித்து பேசுவீர்கள்.
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம்