அண்மையில் பெரியகல்லாற்றில் உறவினர் வளர்ப்பில் இருந்த சிறுமி ஒருவர் பராமரிப்பில்லாமல் பட்டினிக் கொ லை செய்யப்பட்டு முழு இலங்கையை உலுக்கிய சம்பவமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவானது.
இன்று பிரதேசத்திலுள்ள மக்கள் ஒன்றிணைந்து அக்குழந்தையின் மரணத்திற்கு நீதி கோரி வீதியில் இறங்கி ஆர்ப் பாட்டம் செய்து வருகின்றனர்.
இப்படியான இரக்கமற்றவர்கள் தண் டிக்கப்பட வேண்டும். அக் குழந்தைக்கு நாம் அனைவரும் நீதி பெற்று கொடுக்க வேண்டும்.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அவர்கள் தண்டனை பெற வேண்டும். எனவே இப்பதிவை அதிகம் பகிருங்கள். குழந்தைக்கான நீதிக்காக போராடுவோம். அனைவரும் ஆதரவளியுங்கள் என சமூக ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடந்தது என்ன??
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 11வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பெரியகல்லாறு 02ஆம் குறிச்சி, நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலம் கடந்த10ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டது.
சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி சிறிய தாயின் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி அவரின் அம்மமாவின் வீட்டில் இருந்தபோது தாக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுமி கிராம சேவகரினால் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் இருந்த சிறுமியை சிறுமியின் சிறிய தாயார் நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.
இந்த நிலையிலேயே நேற்று காலை சிறிய தாயின் வீட்டில் இருந்து குறித்த சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் சிறுமியின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி எமது jaffna7 செய்தி குழ விரைந்து வினவிய போது,
இந்த குழந்தையின் தாய் குடும்ப கஷ்டத்தின் காரணமாக வெளிநாட்டில் வீட்டு பணி பெண்ணாக வேலைசெய்து வருவதாகவும், இந்த சிறுமியை தனது தங்கையிடம் தான் வரும் மட்டும் பார்த்து கொள்ளுங்கள் என்று விட்டு சென்றதாகவும் தெரியவந்தது.
இந்த சிறுமியை நாளுக்கு நாள் சித்திரவதை செய்து வந்ததாகவும் உணவு கொடுக்காமலும் அறைகளின் வைத்து பூட்டி வைப்பதாகவும் அயல் வீட்டார்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சிறுமியை கற்களால் எறிந்து தாக்கும் CCTV காட்சிகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
https://www.facebook.com/jaffna7com/videos/326056175608500
சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடம்பில் அடி காயங்கள் அதிக அளவில் இருப்பதை கண்ட களுவாஞ்சிக்குடி பொலிஸ் அதிகாரி சிறுமியின் சித்தியை கைது செய்து பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவிவுக்கு விசாரணை முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனவே யாரையும் நம்பி உங்கள் குழந்தைகளை யாரிடமும் விட்டு செல்ல வேண்டாம்.
உங்கள் குழந்தைகளை உங்கள் பார்வையில் இருப்பது கவனம் செலுத்துவது போன்று வராது என்பது இந்த 11வயது சிறுமியின் கொ லை நிருபித்து உள்ளது.