Home Local news யாழ் பல்கலையில் நினைவுத் தூபி!? அளவீடுகள் ஆரம்பம்

யாழ் பல்கலையில் நினைவுத் தூபி!? அளவீடுகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உடைத்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் நிர்வாகத்தின் பணிப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு அமைய பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி இன்று இடம்பெற்றது.

மாணவர்களின் மேற்பார்வையோடு பொறியியலாளர், பல்கலைக்கழக கட்டட பணியாளர்கள் மற்றும் மேற்பார்வை பிரிவினரால் நில அளவுத்திட்ட பிரமாணங்கள் போன்றன கணிக்கப்பட்டன.

இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் வேறு ஒரு தூபியை அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன என எமது jaffna7 செய்தியாளர் தெரிவித்தார்.

இது ஏற்கனவே போர் குற்ற வடுக்களை சுமந்த முள்ளிவாய்காலை பிரதிபலிக்ககூடியவாறு அமைக்கப்பெற்று இடித்து அழிக்கப்பட்டது போன்று இருக்குமா அல்லது வெறுமனே போர் குற்ற வடுக்களை தாங்காமல் பொது தூபியாக அமையுமா பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here