Home தமிழ் நாடு ஆட்டுக்கறி விலையையும் குறைக்க முடிவெடுத்துவிட்ட நெட்டிசன்கள்!

ஆட்டுக்கறி விலையையும் குறைக்க முடிவெடுத்துவிட்ட நெட்டிசன்கள்!

12
0

கொரோனா வைரஸ் காரணமாக கோழி இறைச்சியின் விலை குறைந்துள்ளதை அடுத்து ஆட்டு இறைச்சி விலையையும் குறைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், கோழிகள் மூலம் பரவுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

இது ஒருபுறம் இருக்க பறவைக் காய்ச்சல் குறித்த வதந்திகளும் விஷ்வரூபம் எடுத்துள்ளதால் ஒரு கிலோ ரூ.200 வரை விற்ற பிராய்லர் கோழி இறைச்சி, தற்போது ரூ.40 வரை விற்கப்படுகிறது.

இந்நிலையில் கோழி விலை மட்டும் குறைந்தால் போதாது ஆட்டு விலையும் குறைய வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர் நெட்டிசன்கள். இதற்காக அவர்கள் மீம்ஸுகள் மூலமும், வாட்சப்களில் forward மெசேஜ்கள் மூலமும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அவ்வாறான மேசேஜ்களில் ஆட்டு இறைச்சி விலை 300 ரூபாயாக குறையும் வரை தகவலை ஷேர் செய்யவும் எனவும் தட்டி விட்டுள்ளனர்.

இவ்வாறு இறைச்சி விலையை குறைக்க நெட்டிசன்கள் குமுறி வருவது பொதுமக்களால் வேடிக்கையாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here