மதுபோதையில் தகராறு செய்த இளம் கணவனை போட்டுத்தள்ளிய மனைவி
நுவரெலியா, விஜிதபுர பிரதேசத்தில் பெண்ணொருவரின் தாக்குதலில் கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேகத்திற்கிடமான பெண் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று இரவு பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் விஜிதபுர பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. வீட்டில் குடிபோதையில் இருந்த கணவர், மனைவி வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த கணவர் தனது மனைவியைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் கணவனை மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளது. 32 வயதுடைய பெண் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சொக்லேட் திருடிய விவகாரம்!? யுவதி மீது கொலைவெறி தாக்குதல் நடாத்திய கார்கில்ஸ்...
கார்கில்ஸ் பல்பொருள் அங்காடி ஒன்றில் யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இரண்டு யுவதிகள் உட்பட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த சம்பவம் பொரளை கோட்டா வீதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பதிவாகியுள்ளது. கடந்த 18ஆம் திகதி கடையில் சொக்லேட்களை திருடிச் சென்ற சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தொடர்புடைய செய்தி :- கார்கில்ஸ் சுப்பர் மார்க்கெட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: வெளியான அதிர்ச்சி காணொளி
3 கோடி மதிப்புள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர்...
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 270,000 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைய மன்னார் பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே தாழ்வுபாடு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இரண்டு பொதிகளில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை மாத்திரைகளின் தற்போதைய சந்தை மதிப்பு 3 கோடி என்பதுடன் போதை மாத்திரை கடத்தல் உடன் தொடர்பு பட்டதாக தாராபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்று பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
கார்கில்ஸ் சுப்பர் மார்க்கெட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: வெளியான அதிர்ச்சி காணொளி
இலங்கையில் பிரபல சுப்பர் மார்க்கெட்டான கார்கில்ஸில் இளம் பெண் ஒருவர் அந்த ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹன்வெல்ல கிளையில் பணியாற்றும் பெண்கள் மற்றும் ஆண்களால் பெண் வாடிக்கையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாக்குதலுக்கு உள்ளான பெண் ஹேலிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி என்று தெரிவிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும் குறித்த இடத்தை உறுதிப்படுத்தி சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான திருட்டுக்கு பதிலளிக்கும் வகையில், விற்பனை நிலையத்தின் பல ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இது குறித்து கார்கில்ஸ் வெளியிட்ட அறிக்கையில், சுப்பர் மார்க்கெட்டில் திருட்டு தொடர்பான எங்கள் விற்பனை நிலையத்தில் நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். இந்த நடத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கார்கில்ஸ் நிறுவனத்தின் செயல்முறையுடன் இவ்வாறான செயல் […]
நடு இரவில் நோயாளியை பார்க்க அனுமதிக்காத வைத்தியர் மீது கொலை வெறி...
வத்தேகம வைத்தியசாலையில் நோயாளர் ஒருவரை பார்க்க அனுமதிக்காத காரணத்தினால் குறித்த வைத்தியர் தாக்கப்பட்டதாக வத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளான வைத்தியர் வத்தேகம வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 10.00 மணியளவில் வைத்தியசாலைக்கு வந்த மூவர் இரவு கடமையில் இருந்த வைத்தியரிடம் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளியை பார்வையிட அனுமதிக்குமாறு கோரியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நேரத்தில் நோயாளிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டோம் என வைத்தியர் தெரிவித்ததையடுத்து சந்தேக நபர்களுக்கும் வைத்தியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நால்வர் மீது துப்பாக்கிச் சூடு!! இருவர் பலி – ஒருவர் ஆபத்தான...
கேகாலை அவிசாவளை வீதியில் அவிசாவளை மேல் தல்துவ மர வேலைப்பாடு பட்டறைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 11.15 அளவில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் அவிசா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளனர். அத்துடன், உயிரிழந்தவர்கள் அவிசாவளை தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 27 வயதுடையவர்களாவர். மேலும், அதே முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து அவிசாவளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன காயமடைந்த இருவரும் அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 43 மற்றும் 42 வயதுடையவர்கள். இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அவர்கள் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மன்னாரில் 5 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
மன்னாரில் உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயிலங்குளம் பிரதான சந்தி பகுதியில் தீர்வை வரி செலுத்தாமல் நாட்டுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகிரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்பிட்டி பகுதியில் இருந்து மன்னார் நகரில் உள்ள இரவு உணவகங்களுக்கு தீர்வை வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பனைக்காக கொழும்பு மன்னார் பேரூந்தில் கடத்தி வந்த நிலையிலேயே உயிலங்குளம் பகுதியில் குறித்த நபரை மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நபர் என்பதுடன், சந்தேக நபரிடம் மன்னார் குற்றபுலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சான்றுபொருள் மற்றும் சந்தேக நபரை ஆஜர்படுத்தியுள்ளனர். மேற்படி சந்தேகநபரிடமிருந்து 2900 சிகிரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் தற்போதைய சந்தை மதிப்பு 5 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.