Local news

Home Local news
Local news தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

“இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்” 12 அமெரிக்க எம்.பிகள் வலியுறுத்தல்

0
சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அண்டனி பிளின்கின் உறுதிசெய்ய வேண்டுமென, அந்நாட்டின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இலங்கையில் அரச படைகள் மற்றும் இதர அரச அமைப்புகளால் தமிழர்கள் எதிர்கொண்ட கொடூரமன சித்திரவதைகள் குறித்து தமது கடித்தத்தில் அவர்கள் விபரித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற மக்களவையில் பென்சில்வேனியா மாநிலத்திலிருந்து தெரிவான ஜனநாயக கட்சியின் உறுப்பினர் சம்மர் லீ அம்மையாரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் “இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சரவதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி நடந்து கொண்டது அகியவற்றிற்கு இலங்கையை முறையாக குற்றஞ்சாட்ட வேண்டும்” என கோரப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட அட்டூழியங்களை அவர்களது கடிதம் விரிவாக விபரிக்கிறது. ஐ நாவின் சித்திரவதைக்கு எதிரான தீர்மானத்தின் கீழ் இலங்கை மீது அமெரிக்க வெளிவிவகார அமைச்சு சட்டரீதியாக நடவடிக்கை […]

வவுனியாவில் ஆசிரியரின் நகைகள் கொள்ளை : இரு பெண்கள் உட்பட நால்வர்...

0
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ்ஸில் 20 பவுண் நகைகளை திருடியதாக இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர். மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ்ஸில் முருங்கன் பகுதியில் இருந்து ஆசிரியரான பெண் ஒருவரும் பயணித்துள்ளார். குறித்த பஸ் வவுனியா, மாவட்ட செயலகம் முன்பாக பயணித்த போது குறித்த பெண் பஸ்ஸிலிருந்து இறங்கியுள்ளார். இதன்போது குறித்த பெண்ணின் கைப் பை திறக்கப்பட்டு அதற்குள் இருந்த அவரது சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் காணாமல் போனமையை அவதானித்துள்ளார். உடனடியாக பஸ்ஸை நிறுத்தி பஸ்ஸில் தேடிய போதும் நகை கிடைக்கவில்லை. இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலகவின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் துரித விசாரணைகளை […]

கைவிடப்பட்ட வீடுகளில் ஆண்கள், பெண்களின் உள்ளாடைகள்; மக்கள் விசனம்

0
அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக பகுதி முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். வீடுகளில் உள்ள அறைகளில் அரைகுறையாக ஆண்கள், பெண்களின் உள்ளாடைகள் என்பன சிதறி காணப்படுகின்றன. வெளியிடங்களில் இருந்து வருகின்ற சிலரின் சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் பாவனை பாலியல் செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருபதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இயங்கி வருகின்ற காதி நீதிமன்றத்தை சுற்றி காணப்படுகின்ற வீடுகள் யாவும் கைவிடப்பட்டு சுமார் 19 வருடங்களாக காடாக காணப்படுகின்றது. போதைப்பொருள் நுகர்ந்த இடமாகவும் அந்த வீடுகளில் அடையாளங்கள் தென்படுகின்றன. அத்துடன் விச ஜந்துக்கள், விசப்பாம்புகளின் வாழிடங்களாகவும் இவ்வீடுகள் காணப்படுவதுடன் எவ்வித பாதுகாப்பற்ற இடமாகவும் விளங்குகின்றது. இவ்வாறான கைவிடப்பட்ட வீடுகள் உரிய பராமரிப்புக்கள் இன்மையினால் அதன் அருகில் வாழும் மக்கள் கூட அச்சுறுத்தலினால் இடம்பெயர்ந்து வருகின்றனர். எனவே இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க […]

யாழில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி! குழப்பும்...

0
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, மூன்று மாவீரர்களின் தாயும் , நாட்டு பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகன் பொதுச்சுடர் ஏற்றினார். அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் , நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் இரண்டு தூக்கு காவடிகள் நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நினைவிடத்திற்கு 06க்கும் மேற்பட்ட ஊர்தி பவனிகள் வந்திருந்தன.நினைவு சுடர் ஏற்றுவதற்கு சுமார் அரை மணி […]

நாளை ஸ்தம்பிக்க போகும் வைத்தியசாலைகள் – தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

0
சுகாதார அமைச்சுக்கு முன்பாக நாளை (26) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. தாதியர்களின் யாப்பில் இரகசியமாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே இந்த போராட்டத்தை தாதியர் சங்கத்தினர் மேற்கொள்ள உள்ளனர். இது குறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.பி. மெடிவத்த கருத்து தெரிவிக்கையில், தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டிய நிலையில், அதிகாரிகள் தாதியர் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் வரைவை இரகசியமாக தயாரித்துள்ளனர். அந்த நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, நாட்டின் சுகாதார அமைப்பில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் வேலைக்குச் சென்ற பெண்ணுக்கு உணவுக்குப் பதிலாக இரும்பு ஆணிகள்

0
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்குச் சென்ற இலங்கை பெண்ணுக்கு உணவுக்கு பதிலாக ஐந்து இரும்பு கான்கிரீட் ஆணிகள் மற்றும் ஒரு  துணிகளை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு ஸ்பிரிங் துண்டு என்பன உண்ட நிலையில் அவரது வயிற்றுக்குள் அவை கண்டெடுக்கப்பட்டுள்ளது சவூதி அரேபிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரின் நேரடித் தலையீட்டினால் தூதரகத்தின் ஊடாக இந்த வீட்டுப் பணிப்பெண் சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். மாத்தளை அல்கடுவ தேயிலை தோட்டத்தில் வசித்து வந்த எம்.எஸ்.தியாக செல்வி என்ற இருபத்தொரு வயதுடைய ஒரு பிள்ளையின் தாயார் சவுதி அரேபியாவின் Taid பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். தனது மகளுக்கு நேர்ந்த இந்த குற்றம் தொடர்பில் அவரது தாயார் திருமதி தியாகு குமாரி வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தினூடாக சவூதி அரேபியாவில் வீட்டு வேலைக்காகச் சென்றதாகவும்  அங்கு பணிபுரிந்த […]

வைத்தியசாலையிலிருந்த மகனை பார்க்கப் போன தாய்க்கு நேர்ந்த பரிதாபம்

0
பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவர் ஆசனத்தில் இருந்தவாறே உயிரிழந்துள்ள நிலையில் பஸ்ஸின் சாரதியும், நடத்துனரும் அவரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று மஹரகம பொலிஸில் பதிவாகியுள்ளது. அம்பலம் வல்பொல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஐ.எம்.ரமயகாந்தி என்ற ஆறு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் மகன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மகனை பார்ப்பதற்காக கிரிந்திவெல டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸில் நீர்கொழும்பில் இருந்து மஹரகம வைத்தியசாலைக்கு சென்றுக் கொண்டிருந்தபோதே திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பஸ் வைத்தியசாலைக்கு அருகே வந்ததும், அங்கிருந்தவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி வெளியேறியதாகவும், குறித்த பெண் பஸ்ஸிலிருந்து இறங்காத காரணத்தால் நடத்துனர், அவரை எழுப்ப முயன்றபோதும் பதிலளிக்காததை கண்ட பஸ்ஸின் சாரதி உடனடியாக பஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், மஹரகம பிரதேசத்திற்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி டக்ளஸ் ரூபசிறி […]