Home Blog Page 3

இணுவில் இன்று அதிகாலை 140 தங்கப் பவுண் நகைகள் திருட்டு

0

தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் 140 தங்கப் பவுண் நகை மற்றும் பெறுமதியான அலைபேசி என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இணுவில் பாரதி வீதியில் உள்ள வீட்டில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொழிலதிபர் மற்றும் அவரது தாயார் அடுத்தடுத்து இறைபதமடைந்த நிலையில் இன்று காலை ஆத்ம சாந்தி வழிபாடு வீட்டில் இடம்பெறவிருந்தது.

அதற்காக உறவினர்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில் அதிகாலை அலைபேசியை காணவில்லை என வீட்டில் இருந்தவர்கள் தேடிய போது, வீட்டின் பின்பக்க கதவும் திறந்திருந்துள்ளது.

அதனால் வீட்டில் நகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்த போது அங்கு நகைகளை காணவில்லை எனத் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பரம்பரை நகைகள் 140 தங்கப் பவுணை வீட்டில் ஆத்ம சாந்தி வழிபாடுகள் நிறைவடைந்ததும் வங்கி பெட்டகத்தில் வைக்க இருந்ததாக பொலிஸ் வாக்குமூலத்தில் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Whatsapp Image 2023 11 05 At 12.35.51 Pm 1024X768 Img 20231105 Wa0001 696X522

அடிகாயங்களுடன் கரையொதுங்கிய யாழ் இளைஞனின் சடலம்! வெள்ளவத்தையில் பரபரப்பு

0

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தினம் (05.11.2023) காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம், மானிப்பாய் வீதி, தாவடி என்ற இடத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Screenshot 2023 11 05 14 50 53 023 Com.facebook.katana Edit

Screenshot 2023 11 05 14 50 27 146 Com.facebook.katana Edit

அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வாக 10,000 ரூபாய்?

0

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சரவைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் அரசாங்க ஊழியர்கள் 20 ஆயிரம் ரூபாவை சம்பள அதிகரிப்பாக கோரியிருந்தனர். இதனை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய ராசி பலன்கள் – 05.11.2023

0

இன்றைய பஞ்சாங்கம்

05-11-2023, ஐப்பசி 19, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.18 வரை பின்பு தேய்பிறை நவமி. பூசம் நட்சத்திரம் பகல் 10.29 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். பைரவர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.

இன்றைய ராசி பலன்கள் – 05.11.2023

மேஷம்

இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது.

ரிஷபம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

மிதுனம்

இன்று குடும்பத்தினருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக ஒரு சில உதவிகள் கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

சிம்மம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும்.

கன்னி

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும்.

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

விருச்சிகம்

இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும்.

தனுசு

இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளிப் பயணங்களையும் சுப முயற்சிகளையும் தவிர்ப்பது உத்தமம்.

மகரம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் உண்டாகலாம். வாகனங்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

யாழில் வழிப்பறி கொள்ளை அமோகம்! – பொலிஸார் அசமந்தமா?

0

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் – சங்கானை இடையே வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வீதிகளில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்றுமுன்தினம் முச்சக்கரவண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கி விட்டு சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.

அண்மைய நாள்களில் பெண் ஒருவர் உட்படப் பலரிடம் அந்தப் பகுதியில் வழிப்பறிக் கொள்ளை நடந்துள்ளது என்று பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும், பொலிஸாரின் நடவடிக்கை திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களால் வீதிகளில் நடமாடவே அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மக்கள், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இன்றைய ராசி பலன்கள் – 04.11.2023

0

இன்றைய பஞ்சாங்கம்

04-11-2023, ஐப்பசி 18, சனிக்கிழமை, சப்தமி திதி பின்இரவு 01.00 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. புனர்பூசம் நட்சத்திரம் காலை 07.57 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம்.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

இன்றைய ராசிபலன்கள் – 04.11.2023

மேஷம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.

மிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பெண்களுக்கு பணிசுமை குறையும்.

கடகம்

இன்று நீங்கள் மன உறுதியுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகும். பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

கன்னி

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் மறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்க உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு

இன்று தேவையற்ற வகையில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டி வாகனங்களில் செல்கின்ற போது சட்ட விதிக்குட்பட்டு நடக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மகரம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் சம்பந்தபட்ட நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள்.

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் உங்களின் அலட்சியத்தால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சியில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் குறையும்.

LATEST POSTS